என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கண்டமங்கலம் தீவிபத்து
நீங்கள் தேடியது "கண்டமங்கலம் தீவிபத்து"
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே திடீரென வீட்டில் ஏற்பட்ட தீயில் தூங்கி கொண்டிருந்த பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
கண்டமங்கலம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால் மருதூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது55). விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (51). இவர் அந்த பகுதியில் தனது குடிசை வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென குடிசை வீடு தீ பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது கண்விழித்த விஜயலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வரமுயன்றார். ஆனால் வீட்டில் பற்றி எரிந்த தீயின்வேகம் அதிகமாக இருந்ததால் அவரால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் குடிசைவீட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைக்க முயன்றனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. தீயை அணைக்க முடியவில்லை. நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.
பின்பு அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது விஜயலட்சுமி தீயில் கருகி இறந்து கிடந்தார். இதைபார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தீயில் கருகி பலியான விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப் பிவைத்தனர். வீட்டில் தீ எப்படி பிடித்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

×

X